உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அஞ்சலகங்களில் தேசிய கொடி ரூ.25க்கு விற்பனை

அஞ்சலகங்களில் தேசிய கொடி ரூ.25க்கு விற்பனை

சென்னை, சுதந்திர தினத்தன்று பொதுமக்கள் வீடுகளில் தேசியக் கொடி ஏற்றி கொண்டாட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துஉள்ளார். தேசியக் கொடிக்கு முன் 'செல்பி' எடுத்து, அதை https://harghartiranga.comஎன்ற இணையதளத்தில் பதிவிடுமாறு பிரதமர் தெரிவித்துள்ளார். அவ்வாறு பதிவிடுவோருக்கு மத்திய அரசு சார்பில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.இந்த 'இல்லம் தோறும் தேசியக் கொடி' திட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு தேசியக் கொடி விற்பனையை, அஞ்சல் துறை துவக்கியுள்ளது.ஒரு தேசிய கொடியின் விலை 25 ரூபாய். இந்த கொடி, 50 செ.மீ., அகலமும், 75 செ.மீ., உயரமும் கொண்டது. அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய கொடி விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி