உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திறந்தவெளி நிலங்களில் 35 பூங்கா அமைக்க திட்டம்

திறந்தவெளி நிலங்களில் 35 பூங்கா அமைக்க திட்டம்

சென்னை:சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான நிலங்கள் பல, ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதில், திறந்தவெளி இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில், புதிய பூங்காக்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ், 35 திறந்தவெளி இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.திறந்தவெளி உடற்பயிற்சிக்கான உபகரணங்களுடன், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையிலும் வடிவமைக்கப்படும்.மழைக்காலத்தில் நீர் தங்கும் ஸ்பாஞ்ச் பூங்காகளாகவும், குறைந்தபட்ச கான்கிரீட், அதிகபட்மாக பசுமையை கொண்டிருக்கும் வகையிலும் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ