| ADDED : ஆக 19, 2024 02:39 AM
ஆவடி:ஆவடி ரயில் நிலையத்தின் பின்புறம் திருமலைராஜபுரம் பகுதி உள்ளது. இங்கு, ரயில்வே உட்பட ஏழு தனியார் வாகன நிறுத்தமிடங்கள் உள்ளன.இருப்பினும், சாலையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவது நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன. போதுமான, 'பார்க்கிங்' வசதி இருந்தும் தினமும், 50க்கும் மேற்பட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தப்படுகின்றன.வெட்டவெளியில் பாதுகாப்பின்றி நிறுத்தப்படும் வாகனங்களில், பெட்ரோல் டேங்க் சூடாகி அசம்பாவிதம் ஏற்படும் என, பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். சிலர், மாதக்கணக்கில் வாகனங்கள் நிறுத்தியுள்ளனர்.இதை, ஆவடி ரயில்வே ஆர்.பி.எப்., போலீசார் கண்டுக்கொள்வதில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சம்பந்தப்பட்ட ஆர்.பி.எப்., போலீசார், விதிமீறி நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.