உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுனாமியால் பாதித்த 116 மீனவர்களுக்கு வீடு வழங்க கோரிக்கை

சுனாமியால் பாதித்த 116 மீனவர்களுக்கு வீடு வழங்க கோரிக்கை

காசிமேடு:சுனாமியால் பாதிக்கப்பட்ட 116 மீனவர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து மீனவர் மக்கள் முன்னணி கட்சி தலைவர் சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கை:காசிமேடு பகுதியில், கடந்த 2004ம் ஆண்டு சுனாமி பேரலையால் 180 மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. அவர்களில், 64 பேருக்கு மட்டும் கார்கில் நகரில் வீடு வழங்க 'டோக்கன்' வழங்கப்பட்டுள்ளது. 50,000 ரூபாய் பங்களிப்பு தொகையாகவும், மாதம் 2,000 ரூபாய் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 116 பேருக்கு, வீடுகள் வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கார்கில் நகரில் உடனே வீடு வழங்க வேண்டும்.கடலில் மீன்பிடி ஒழுங்கு முறை விதிகளை மீறி, மீன்பிடிக்கும் சுருக்கு மடிவலை, இரட்டை மடிவலை அதிக குதிரை திறன் கொண்ட இன்ஜின்களை தடை செய்ய வேண்டும்.கடற்கரை கழிமுக பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக நடக்கும் வாம்ஸ் உப்புநீர் மண்புழு கடத்தல் செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை