உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தங்காவதீஸ்வரர் கோவில் சிவன், பார்வதி சிலை திருட்டு

தங்காவதீஸ்வரர் கோவில் சிவன், பார்வதி சிலை திருட்டு

காஞ்சிபுரம், காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் மேட்டுத் தெருவில், தங்காவதீஸ்வரர் கோவில் உள்ளது. வழக்கம்போல், நேற்று காலை அர்ச்சகர் ரமேஷ், கோவிலை திறக்க வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. ஓரடி உயர சிவன் சிலையும், முக்கால் அடி உயர பார்வதி சிலையும் திருட்டு போயிருந்தன. இவை பித்தளையால் ஆனவை. சிவ காஞ்சி போலீசார் விசாரிக்கின்றனர்.இது குறித்து, கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி கூறியதாவது:இந்த கோவிலுக்கு, 2012ம் ஆண்டு பிரதோஷ சிவன் மற்றும் பார்வதி சிலையை உபயதாரர் ஒருவரால் கொடுக்கப்பட்டு இருந்தது. கோவில் முறை செய்பவர்கள், பிரதோஷம் முடிந்த பின், சிலைகளை வீட்டிற்கு எடுத்துச் சென்றுவிடுவது வழக்கம்.தற்போது இருக்கும் முறைக்காரர், புதியவர் என்பதால் சிலைகளை கோவில் வளாகத்தில் வைத்திருக்கிறார். இதை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி