உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முனீஸ்வரர் கோவிலில் சுவாமி கிரீடம் திருட்டு

முனீஸ்வரர் கோவிலில் சுவாமி கிரீடம் திருட்டு

ஸ்ரீபெரும்புதுார்,காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் பால் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி, நேற்று காலை 5:30 மணிக்கு மின்விளக்கை அணைக்க கோவிலுக்கு சென்றார். அப்போது, கோவிலின் முன்புற கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார்.உள்ளே, உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு, காணிக்கை, 2 சவரன் தங்க செயின் மற்றும் வெள்ளி கிரீடம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஒரகடம் போலீசார் விசாரிக்கின்றனர்.பனம்பாக்கம் பகுதியில் காவல் உதவி மையம் இருந்தும், ஓராண்டிற்கும் மேலாக திறக்கப்படாமல் பூட்டியே வைக்கப்பட்டு உள்ளது. போலீசாரும், இரவு ரோந்து வருவதில்லை. இதனால், இப்பகுதியில் குற்றங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.ஒரகடம் போலீசார், இரவு நேரத்தில் ரோந்து வரவேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை