உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / முதலாளியின் மனைவியை மிரட்டியவர் கைது

முதலாளியின் மனைவியை மிரட்டியவர் கைது

பெரவள்ளூர், பெரவள்ளூர் பகுதியில் 'ஆவின்' பால் மொத்த வியாபாரம் செய்பவர் தங்கம். இவரது மனைவி செல்வி, 57. தங்கத்தின் பால் வியாபார கடைக்கு, 2 மாதத்திற்கு முன் மணலியைச் சேர்ந்த ராஜ்குமார், 23, என்பவர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.சரியாக பணி செய்யாமல் இருந்ததுடன் பண வசூலும் சரிவர செய்யாததால், கடந்த 9ம் தேதி ராஜ்குமாரை, தங்கம் வேலையை விட்டு நிறுத்தியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த தங்கம், கடந்த 19ம் தேதி வீட்டில் இல்லாதபோது, வீட்டில் இருந்த செல்வியிடம் நண்பர்கள் மூவருடன் சென்ற ராஜ்குமார், அவரை அசிங்கமாக பேசி அடிக்க முயன்றார். தங்கத்தையும் மொபைல் போனிலேயே மிரட்டியுள்ளார். இது குறித்து விசாரித்த திரு.வி.க., நகர் போலீசார், நேற்று முன்தினம் ராஜ்குமாரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை