உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விம்கோ நகர் மெட்ரோவில் இரண்டு எஸ்கலேட்டர்

விம்கோ நகர் மெட்ரோவில் இரண்டு எஸ்கலேட்டர்

சென்னை, விம்கோ நகர் பணிமனை மெட்ரோவில், இரண்டு புது எஸ்கலேட்டர்கள் அமைக்கும் பணிகளை வரும் டிச., மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில், இருபுறமும் நுழைவு பகுதி இருக்கிறது. இருப்பினும், பயணியர் இன்னும் எளிமையாக வந்து செல்ல வசதியாக, நுழைவுப் பகுதி அருகில் இரண்டு எஸ்கலேட்டர்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான, பணிகள் நடைபெற்று வருகின்றன. மெட்ரோ ரயில் நிலையங்களில் வழக்கமாக இருக்கும் எஸ்கலேட்டர்களை விட, சற்று உயரமாக இருக்கும். இந்த பணிகள் வரும் டிச., மாதத்தில் முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ