உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அராபத் ஏரியில் கழிவுநீர் விட்ட 224 வீட்டு இணைப்பு துண்டிப்பு

 அராபத் ஏரியில் கழிவுநீர் விட்ட 224 வீட்டு இணைப்பு துண்டிப்பு

ஆவடி: ஆவடி அடுத்த திருமுல்லைவாயில், சி.டி.எச்., சாலை - சோழம்பேடு பிரதான சாலை ஒட்டி, 26.40 ஏக்கர் பரப்பளவில் அராபத் ஏரி உள்ளது. இந்த ஏரியைச் சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரால் ஏரி மாசடைந்துள்ளது. அதனால், அராபத் ஏரியில் நான்கு நாட்களாக மாநகராட்சி ஆய்வு செய்தது. இதில், திருமுல்லைவாயில், மணிகண்டபுரத்தில் உள்ள 224 வீடுகளில் இருந்து, நேரடியாக கழிவுநீர் ஏரியில் விடுவது தெரிந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கி, சட்டவிரோத கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டது. அவர்களுக்கு 45,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை