| ADDED : ஜன 24, 2024 12:38 AM
பட்டினப்பாக்கம், பட்டினப்பாக்கம், மூன்றாவது டிரஸ்ட் கிராஸ் தெருவில்,'சுவாதி பில்டர்' எனும் தனியார் கட்டுமான நிறுவனம், ஐந்து மாடி கட்டடம் ஒன்றை கட்டி வருகிறது.இதற்காக தொழிலாளர்கள், கட்டடம் கட்டும் இடத்திலேயே தங்கி பணிபுரிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து, இரவு மூன்றாவது மாடியில் தொழிலாளர்கள் சிலர் துாங்கினர். அதன் அருகில், மின்துாக்கி அமைக்க பள்ளம் தோண்டப்பட்டிருந்தது. துாக்க கலக்கத்தில் இருந்த தொழிலாளி ஒருவர், இந்த பள்ளத்தில் உருண்டு விழுந்தார்.அலறல் சத்தம் கேட்டு மற்ற தொழிலாளர்கள், பள்ளத்தில் விழுந்த நபரை வெளியில் துாக்கினர்.ஆனால் அவர், தலையில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்து கிடந்தார்.தகவலின்படி வந்த பட்டினப்பாக்கம், இறந்தவரின் உடலை கைப்பற்றி விசாரித்ததில், அவர் செங்குன்றத்தைச் சேர்ந்த சாரம் கட்டும் தொழிலாளி செல்வம், 42, என தெரிந்தது. போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.