உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செங்குன்றம் காமராஜர் சிலை பகுதியில் பதாகைகள் அகற்றம்

செங்குன்றம் காமராஜர் சிலை பகுதியில் பதாகைகள் அகற்றம்

செங்குன்றம், செங்குன்றம், ஜி.எஸ்.டி., சாலை, காமராஜர் சிலை முதல் திருவள்ளூர் கூட்டுக்சாலை வரை, 1.5 கி.மீ., துாரத்துக்கு சாலையின் இருபுறமும் டீக்கடை, டிபன் கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளின் விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன.போக்குவரத்துக்கு இடையூறாக இவை வைக்கப்பட்டு இருந்ததால், நடைபாதையை பயன்படுத்துவோர், வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி விபத்தில் சிக்கினர்.இதுகுறித்து, செங்குன்றம் போக்குவரத்து போலீசாருக்கு புகார்கள் சென்றன. பலமுறை எச்சரித்தும் வணிகர்கள் அதை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில், விதி மீறி சாலையில் வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகளை, போக்குவரத்து போலீசார் அப்புறப்படுத்தி எடுத்துச் சென்றனர். மீண்டும் விளம்பர பதாகைகள் வைத்தால், அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை