உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வட்ட செயலரை குத்திய பா.ஜ., நிர்வாகிக்கு வலை

வட்ட செயலரை குத்திய பா.ஜ., நிர்வாகிக்கு வலை

வேளச்சேரி, வேளச்சேரி, நேதாஜி நகரைச் சேர்ந்தவர் நடராஜ், 52; பா.ஜ., 175வது வார்டு வட்டச் செயலர்.இவர் நேற்று, வேளச்சேரி பகுதியில் ஒரு ஆட்டோவில் அமர்ந்திருந்தார்.அப்போது, பா.ஜ., வேளச்சேரி பகுதி கூட்டுறவு பிரிவு தலைவர் பாரதிதாசன், 42, ''என் பெயரை ஏன் நிகழ்ச்சி போஸ்டரில் போடுவதில்லை,'' என, நடராஜிடம் கேட்டுள்ளார்.இதில் ஏற்பட்ட தகராறில் பாரதிதாசன் ஆத்திரமடைந்து, நடராஜை கத்தியால் குத்தினார்.பலத்த காயமடைந்த நடராஜ், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்படி, தலைமறைவான பாரதிதாசனை, வேளச்சேரி போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை