| ADDED : மார் 18, 2024 01:03 AM
மணலி:மணலி மண்டலம், நெடுஞ்செழியன் சாலை மிக முக்கிய இணைப்பு சாலையாகும். இங்கு, சி.பி.சி.எல்., பாலிடெக்னிக், பொதுக் கழிப்பறைகள், 18வது வார்டு கவுன்சிலர் அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன.தவிர, மணலியில் இருந்து மாதவரம் விரைவு சாலைக்கு வருவோருக்கு, மணலி - நெடுஞ்செழியன் சாலை பிரதானமாகும். இந்நிலையில், சில தினங்களாக இச்சாலையில் இருக்கும், 20க்கும் மேற்பட்ட தெருவிளக்குகளும் உயர் மின் கோபுர விளக்கும் ஒளிராமல் உள்ளது.இதன் காரணமாக, அச்சாலை முழுதும் கும்மிருட்டாக உள்ளது. ஆனால், தெருவிளக்குகளை சீரமைக்காமல் மாநகராட்சி மின் வாரிய அதிகாரிகள் அலட்சியமாக உள்ளனர்.இரவு 7:00 மணிக்கு மேல் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், வழிப்பறி அச்சத்தில் பீதியுடன் பயணிக்கின்றனர்.அச்சாலையில் நடக்கும் குற்றச்சம்பங்களுக்கு, அசம்பாவிதங்களுக்கும் மாநகராட்சியே பொறுப்பேற்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.