உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியாபாரியிடம் ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது

வியாபாரியிடம் ரூ.3 கோடி மோசடி செய்தவர் கைது

சென்னை கோயம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன்; பழ வியாபாரி. இவர், சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்து இருந்தார்.அதில், எனக்கு அறிமுகமான சுரேஷ் மற்றும் ஸ்ரீதர் ஆகிய இருவரும், சீன நாட்டிலிருந்து 100 கோடி ரூபாய் நிலக்கரி,'ஆர்டர்' கிடைத்துள்ளது. 3 கோடி ரூபாய் கொடுத்தால், 6 கோடி ரூபாய் கொடுப்பதாக ஆசை வார்த்தை கூறினர்.இதற்கு 'செக்யூரிட்டி'யாக, சுரேஷ் பெயரில் உள்ள ஆவணங்களையும், அவரது மனைவி ஈஸ்வரி பெயரிலுள்ள அசல் ஆவணங்களையும் தருவதாக கூறினர். இதை நம்பி, 2.97 கோடி ரூபாயை அனுப்பினேன். பணத்தை பெற்றுக்கொண்ட இருவரும், என்னை ஏமாற்றி விட்டனர். இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு இருந்தார்.புகாரின்படி, நம்பிக்கை மோசடி ஆவண குற்றப் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்தனர்.நேற்று முன்தினம், சென்னை ரிப்பன் மாளிகை அருகே, இதில் தொடர்புள்ள சுரேஷ், 53, என்பவரை மடக்கிப் பிடித்தனர். பின், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை