| ADDED : ஜன 19, 2024 12:28 AM
பாரிமுனை, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, தமிழகம் முழுதும் பல்வேறு தரப்பினரும் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.அந்த வகையில், அ.தி.மு.க., அமைப்பு செயலர் ராயபுரம் ஆர்.மனோ ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலிந்தோருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா பாரிமுனை, ராஜாஜி சாலையில் நேற்று நடந்தது.இதில், முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், வடசென்னை தெற்கு மேற்கு மாவட்டச் செயலர் பாலகங்கா ஆகியோர் பங்கேற்று எம்.ஜி.ஆரின் உருவப் படத்திற்கு மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.மேலும் பொதுமக்கள் 1,000 பேருக்கு மட்டன் பிரியாணியும், 1 லட்ச ரூபாய் நிதி உதவியும் வழங்கினார். இதில் நுாற்றுக்கணக்கான நிர்வாகிகளும், தொண்டர்களும் பங்கேற்றனர்.