உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மின் கம்பியால் அபாயம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

மின் கம்பியால் அபாயம் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

செங்குன்றம்,செங்குன்றம், நாரவாரிக்குப்பம், டாக்டர் அம்பேத்கர் தெரு, சி.கே.மாணிக்கனார் தெரு சந்திப்பில் இருந்த மின் கம்பம் சேதமடைந்தது.செங்குன்றம் மின் வாரியத்தினர், அதை மாற்றும்போது, 1 அடி இடைவெளியில் உட்புறமாக அமைத்தனர். அதில் இருந்த மின் இணைப்பு கம்பிகள், அங்குள்ள குமார் என்பவரின் வீட்டின் மீது தாழ்வாக தொங்குகிறது.இதனால், விபத்து அச்சத்தால், மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தார். ஆனால், அதிகாரிகள் இதுவரை அந்த பிரச்னைக்கு தீர்வு காணாமல், அலட்சியம் காட்டி வருகின்றனர்.இதனால், மழைக்காலங்களில், மாடிக்கு செல்வதையே அவரது குடும்பத்தினர் தவிர்த்துள்ளனர். மேலும், மாடியில் வீடு கட்டும் பணியையும் ஓராண்டாக நிறுத்தி வைத்துள்ளார். ஆபத்தான வகையில் உள்ள மின் கம்பிகளால் விபத்து, உயிரிழப்பு அசம்பாவிதங்கள் நேரிடும் முன், வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி