உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏசி ஓய்வு அறைகள் திறப்பு

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஏசி ஓய்வு அறைகள் திறப்பு

சென்னை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தனியார் பங்களிப்போடு, அதிநவீன 'ஏசி' சொகுசு ஓய்வு அறைகள் திறக்கப்பட்டுள்ளன.விமான நிலையத்தில் இருப்பது போல், பயணியருக்கு புதுமையுடன் சொகுசு வசதிகள் இடம் பெற்றுள்ளன. 'டென் லெவன் ஹாஸ்பிடாலிட்டி' என்ற தனியார் நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டிற்கு சேவை வழங்க 17.75 கோடி ரூபாய்க்கு ரயில்வேயுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:தனியாருடன் இணைந்து பயணியருக்கு பல்வேறு வசதிகளை ரயில்வே வழங்கி வருகிறது. தற்போது சென்ட்ரல் ரயில் நிலையத்தின் ஆறாவது நடைமேடை பகுதியில் துவங்கப்பட்டுள்ள சொகுசு ஓய்வு அறையில், ஒரே நேரத்தில் 180 பயணியர் தங்க முடியும். 112 சோபாக்கள், 10 தனிப்பட்ட சாய்வு இருக்கைகள் உள்ளன. அதுபோல், பயணியர் உறங்கும் வகையில் 18 சிங்கிள் பாட் எனப்படும் ஒற்றை தனிப்படுக்கை, நான்கு இரட்டை படுக்கைகள் உள்ளன. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனித்தனி கழிவறைகள், குளிப்பதற்கும் பிரத்யேக இடங்கள் இருக்கும். பயணியரை கவரும் வகையில் உள்அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.இந்த சொகுசு அறையில் ஓய்வு எடுக்க, ஒரு மணிநேரத்திற்கு 200 ரூபாய் கட்டணம். வைபை வசதியுடன், டீ அல்லது காபி வழங்கப்படும். மூன்று மணி நேரம் வரை தங்கி, ஓய்வு எடுக்க 840 ரூபாய் கட்டணம். இந்த ஓய்வு அறைகள் 24 மணி நேரமும் செயல்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை