உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பல்லாவரம் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல்

பல்லாவரம் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு சீல்

தாம்பரம்:தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்ததை தொடர்ந்து, தாம்பரம் மாநகராட்சியில் சுவர் ஓவியங்கள், சுவரொட்டிகள் அழித்தல், பேனர் அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதன் ஒரு பகுதியாக, தாம்பரம் மாநகராட்சி, இரண்டாவது மண்டல அலுவலக வளாகத்தில் இயங்கி வந்த பல்லாவரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு வருவாய் துறையினர் நேற்று, 'சீல்' வைத்தனர். ஆனால், தாம்பரம் எம்.எல்.ஏ., அலுவலகத்திற்கு இன்னும் சீல் வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல், 1, 5வது மண்டலங்களில் கட்சி சார்ந்தவற்றை அகற்றுவதில், மாநகராட்சி ஊழியர்கள் அலட்சியம் காட்டி வருகின்றனர். மேற்கு தாம்பரம், கிழக்கு தாம்பரம் பேருந்து நிலையங்களில் இருந்த அரசின் விளம்பர பலகைகள் மறைக்கப்படாமல் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ