உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  சாலை ஆக்கிரமிப்புகள் வேளச்சேரியில் அகற்றம்

 சாலை ஆக்கிரமிப்புகள் வேளச்சேரியில் அகற்றம்

வேளச்சேரி: வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நேற்று துவங்கியது. அடையாறு மண்டலம், 177வது வார்டு வேளச்சேரி பிரதான சாலை, ஐ.ஐ.டி., நுழைவாயிலில் இருந்து, விஜயாநகர் பேருந்து நிலையம் வரை, 1.5 கி.மீ., நீளம், 80 அடி அகலம் கொண்டது. இருவழி பாதையான இந்த சாலையில், இரண்டு பகுதிகளிலும், வணிக ஆக்கிரமிப்புகள் அதிக அளவு உள்ளன. இதனால், அடிக்கடி வாகன நெரிசல், விபத்துகள் நடக்கின்றன. புகாரின் பேரில், ஆக்கி ரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. நேற்று, அரை கி.மீ., துாரம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மீதமுள்ள பகுதியில், அடுத்தடுத்த நாட்களில் அகற்றப்படும் என, மாநகராட் சி அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை