உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரூ.1.60 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்

 ரூ.1.60 கோடி கஞ்சா ஏர்போர்ட்டில் பறிமுதல்

சென்னை: தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 1.60 கோடி ரூபாய் மதிப்பு கஞ்சா, சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் புறப்பட்ட 'தாய் ஏர்வேஸ்' பயணியர் விமானம், நேற்று முன்தினம் நள்ளிரவு, சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. இதில் சென்னையைச் சேர்ந்த 30 வயது ஆண் பயணி ஒருவர் வந்திருந்தார். அவரது உடைமைகளை சோதனை செய்தபேது, பிஸ்கட் மற்றும் சாக்லேட் டின்கள் இருந்தன. இவற்றுக்குள் ஒன்பது பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அதிகாரிகள், அவற்றை பிரித்து பார்த்தபோது, கஞ்சா இருந்தது. தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 3.35 கிலோ கஞ்சாவின் மதிப்பு 1.60 கோடி ரூபாய். கடத்தல் பயணியை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை