அம்பத்துார்: தெரு நாய்கள் கொடுமைப்படுத்தப்படுவதாக அறிந்து ஆய்வுக்கு சென்ற விலங்குகள் நல ஆர்வலர், அப்பகுதி மக்களால் தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அம்பத்துார், வி.ஜி.என்., நகரில் சில தினங்களுக்கு முன், சாலையில் நடந்து சென்ற விந்தியா, 31, என்பவரை, நாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்தது. அப்பகுதியில் வசித்து வரும் ஓய்வு பெற்ற சி.ஆர்.பி.எப்., டி.ஐ.ஜி.,யான கிருஷ்ணமூர்த்தி, 63, என்பவர், 50க்கும் மேற்பட்ட தெரு நாய்களுக்கு தினமும் உணவளிப்பதாகவும், அதனால் அப்பகுதியில் அதிகப்படியான தெரு நாய்கள் சுற்றித் திரிவதாக அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில், தெருநாய்களை அப்பகுதிவாசிகள் கொடுமைப்படுத்துவதாக கிடைத்த தகவலின்படி, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தின் கள அலுவலர் பால் ஆபிரகாம், 25, என்பவர் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டுள்ளார். தகவலறிந்த அப்பகுதிவாசிகள், 'சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்லுங்கள்' எனக்கூறி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியதாக கூறப்படுகிறது. இதில், அப்பகுதி மக்கள் தாக்கியதில், பால் ஆபிரகாம் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. 30 பேர் வருகை இந்நி லையில், சென்னை யின் பல்வேறு பகுதிகளில் இருந்து விலங்குகள் நல ஆர்வலர்கள் 30க்கும் மேற்பட்டோர், நேற்று அம்பத்துார், வி.ஜி.என்., நகருக்கு வந்தனர். அவ ர்கள், தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுகளை அப்பகுதி யில் உள்ள நாய்களுக்கு வழங்கினர். இதைக்கண்ட, அப்பகுதிவாசிகள் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இத னால் இருதரப்பிற்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. தகவலறிந்து சென்ற அம்பத்துார் தொழிற் பேட்டை போலீசார், இருதரப்பையும் சமரசம் செய்ய முயன்றனர். ஆனால், முடியவில்லை. இதை யடுத்து, இருதரப்பினரும் மாறி மாறி புகார் அளிக்க, அம்பத்துார் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.