உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  திருப்பரங்குன்றம் மாதிரி தீபத்துாணில் தீபம் ஏற்றிய தமிழக பா.ஜ., தலைவர்

 திருப்பரங்குன்றம் மாதிரி தீபத்துாணில் தீபம் ஏற்றிய தமிழக பா.ஜ., தலைவர்

அம்பத்துார்: பாடியில் நடந்த பொதுக்கூட்டத்தில், திருப்பரங்குன்றம் மாதிரி தீபத்துாணில் தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தீபம் ஏற்றினார். சென்னை மேற்கு மாவட்ட பா.ஜ., சார்பில், பாடி, டி.வி.எஸ்., நகரில் மாவட்ட தலைவர் அம்பத்துார் பாஸ்கர் தலைமையில், 'தமிழகம் தலை நிமிர தமி ழனின் பயணம்' பொதுக்கூட்டம், நேற்று மாலை நடந்தது. பொதுக்கூட்டத்திற்கு வந்த தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு, பூரண கும்ப மரியாதை அளிக்கப் பட்டது. கூட்டத்தில், தமிழக பா.ஜ., சார்பில் மாநில பொதுச்செயலர் கருப்பு முருகானந்தம் உட்பட, மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளானோர் பங்கேற்றனர். தலை வர் நயினார் நாகேந்திரன், மேடை அருகே இருந்த திருப்பரங்குன்றம் மாதிரி தீபத்துாணில் தீபம் ஏற்றினார். அப்போது அனைவரும் 'வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா ...' என முழங்கினர். பின் அவர் பேசியதாவது: தி.மு.க., ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த சிங்கார சென்னை, தற்போது சீரழிந்த சென்னையாக மாறிவிட்டது. ஆட்சிக்கு வருவதற்கு முன் இருந்த ஸ்டாலினின் இரும்பு கரம், முதல்வரானதும் துருபிடித்து விட்டது. தற்போது வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள், தே.ஜ., கூட்டணி, தமிழகத்தில் 157 இடங்களில் வெற்றி பெறும் என கூறுகின்றன. அழிவின் விளிம்பில் உள்ள தி.மு.க., அரசை எச்சரிக்கிறேன். தி.மு.க.,வில் உள்ள, 17 பேர் மீது அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. இதில், எத்தனை பேர் சிறைக்கு செல்வர் என தெரியாது. சென்னையில், வெள்ளத்தடுப்பிற்காக 4,000 கோடி செலவு செய்ததாக கூறுகின்றனர். ஆனால், 400 ரூபாய் கூட செலவு செய்யவில்லை. திருப்பதிக்கு போனால் திருப்பம் வருவது போல், தி.மு.க., ஆட்சிக்கு திருப்பரங்குன்றத்தால் திருப்ப வரப்போகிறது. இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை