உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருமணம் செய்வதாக ஏமாற்றிய போலீஸ்காரர் மீது பெண் புகார்

திருமணம் செய்வதாக ஏமாற்றிய போலீஸ்காரர் மீது பெண் புகார்

வளசரவாக்கம், திருமணம் செய்வதாக ஏமாற்றிய போலீஸ்காரர் மீது இளம்பெண் அளித்த புகாரின்படி வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.வளசரவாக்கம் காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் தம்பிதுரை.இவர், தன்னிடம் நண்பராக பழகி, பின் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, நெருக்கமாக இருந்து விட்டு, திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றுவதாக, இளம்பெண் ஒருவர் வளசரவாக்கம் உதவி கமிஷனரிடம், சமீபத்தில் புகார் அளித்தார்.இந்த புகார் மனு வளசரவாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.இதன்படி, வளசரவாக்கம் அனைத்து மகளிர் போலீசார், இந்த சம்பவம் குறித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை