மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
15 hour(s) ago
நாளைய மின்தடை
15 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
15 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
15 hour(s) ago
சூலுார்;சூலுார் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த, 1.4 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.சூலுார் அடுத்த அப்பநாயக்கன்பட்டி பகுதியில், குட்கா பொருட்கள் கடத்தப்படுவதாக சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ., ராஜேந்திர பிரசாத் தலைமையிலான போலீசார், அப்பநாயக்கன்பட்டி கலங்கல் சந்திப்பில், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில், 200 கிலோ குட்கா பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. காரில் இருந்த, சேலம் மாவட்டம், மேச்சேரியை சேர்ந்த சுரேஷ் பாபு, 34, அதிராம்பட்டியை சேர்ந்த பாரதி, 29, கோவை வடவள்ளியை சேர்ந்த தென்னரசு, 29 ஆகிய மூவரை கைது செய்தனர். விசாரணையில், அப்பநாயக்கன்பட்டியில் ஒரு குடோனில் புதுக்கி வைத்திருந்த, 1.2 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். மொத்தம், 1.4 டன் குட்கா பொருட்கள், காரை பறிமுதல் செய்த போலீசார், மூவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர். சூலூர் போலீசார் நேற்று சிந்தாமணி புதூர் அருகே வாகன சோதனை நடத்தினர். அதில், சிங்காநல்லூரை சேர்ந்த சேகர் மகன் பாலமுருகன், 34 என்ற நபரிடம் இருந்து, 100 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago