| ADDED : ஜூலை 07, 2024 11:46 PM
தொண்டாமுத்தூர்;காருண்யா நிகர்நிலை பல்கலையில், 29வது பட்டமளிப்பு விழா, பல்கலை., அரங்கத்தில் நடந்தது. இவ்விழாவில், துணைவேந்தர் பிரின்ஸ் அருள்ராஜ் வரவேற்றார். காருண்யா நிகர் நிலை பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன் தலைமை வகித்து, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.இதில், சிறப்பு விருந்தினராக அகில இந்திய தொழில் நுட்ப கழகத்தின், முன்னாள் தலைவர் மன்தா கலந்து கொண்டார். இவ் விழாவில், இந்திய ரயில்வே வாரியத்தின் உறுப்பினரும், டில்லி மெட்ரோ திட்டத்தின் முன்னாள் நிர்வாக இயக்குனருமான ஸ்ரீதரனின் சேவையை பாராட்டி, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.விழாவில், 1,560 இளங்கலை பட்டதாரிகளுக்கும், 402 முதுகலை பட்டதாரிகளுக்கும், 80 முனைவர் பட்டதாரிகளுக்கும் என, மொத்தம், 2,042 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது.ஐந்து மாணவர்களுக்கு, வேந்தர் விருது வழங்கப்பட்டது. பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.