உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தாறுமாறாக சென்றவரால் 4 கார்கள் தொடர் விபத்து

தாறுமாறாக சென்றவரால் 4 கார்கள் தொடர் விபத்து

கிணத்துக்கடவு : பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிணத்துக்கடவு அருகே நான்கு கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளாயின.பொள்ளாச்சி - கோவை தேசிய நெடுஞ்சாலையில், வாகன போக்குவரத்து அதிகமுள்ளது. இந்த ரோட்டில் 'யு டேர்ன்' பகுதியில் வாகனங்கள் காத்திருக்கும் போது, அடிக்கடி விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது.கவனக்குறைவாக ரோட்டில் குறுக்கிடும் போதும், வாகனங்களை 'ஓவர்டேக்' செய்யும் போது, இரு சக்கர வாகனங்கள் விபத்துக்குள்ளாகி, உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.இதில், நேற்று காலை கிணத்துக்கடவு, தாமரைக்குளம் பகுதியில் ரோட்டில் சென்ற இருசக்கர வாகனத்தில் ஒருவர் தாறுமாறாக சென்றுள்ளார். அந்த வாகனத்துக்கு பின்னால் சென்ற கார் டிரைவர், விபத்து நடந்து விடக்கூடாது என திடீரென பிரேக் பிடித்தார். இதனால், காரை தொடர்ந்து வந்த மூன்று கார்களும் ஒன்றன் பின் ஒன்னாக மோதி விபத்து ஏற்பட்டது.விபத்துக்கு காரணமான இருசக்கர வாகன ஓட்டுநர் நிற்காமல் சென்றுவிட்டார். இந்த விபத்தில், அதிர்ஷ்டவசமாக காரில் வந்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. விபத்து குறித்து, கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை