உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உயிர் பலியை ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை; பா.ஜ., கோரிக்கை

உயிர் பலியை ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை; பா.ஜ., கோரிக்கை

மேட்டுப்பாளையம் : காரமடை பகுதியில், உயிர் பலியை ஏற்படுத்தும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பா.ஜ., மாவட்ட தலைவர், வட்டார போக்குவரத்து ஆய்வாளரிடம் கோரிக்கை மனு வழங்கினார். கோவை வடக்கு பா.ஜ., மாவட்ட தலைவர் சங்கீதா, மேட்டுப்பாளையம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமாரிடம் கொடுத்த கோரிக்கை மனு:காரமடை பகுதியில் கடந்த இரு தினங்களில், தனியார் வாகனங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். தொடர்ந்து விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. குடும்பத்தின் ஆணிவேராக இருந்தவர்கள், இறந்ததால் குடும்பத்தினர் வாடுகின்றனர். இந்த விபத்திற்கு காரணம், சாலை முறையாக பராமரிக்கப்படாததும், மோட்டார் வாகன சட்டத்திற்கு முரணாக, தகுதி பெறாத, பழுதுள்ள வாகனங்களை இயக்குவதும், முறையாக பயிற்சி இல்லாத வாகன ஓட்டுனர்களை கொண்டு வாகனங்களை இயக்குவது ஆகும். மேலும், குடிபோதையில் வாகனங்களை ஓட்டுவதால், இது மாதிரியான விபத்துக்கள் ஏற்படுகின்றன. விபத்துக்கு தனியார் பேருந்தின் அதிவேகமும் காரணமாக உள்ளது. எனவே காரமடை வழித்தடத்தில், ஓட்டும் அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்து, தரமற்ற தகுதியில்லாத வாகனங்களின் இயக்கத்தை, தடை செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். முறையான பயிற்சி இல்லாத, குடிபோதையில் வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டுநர்களை கண்டறிந்து, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது, மாவட்ட துணைத்தலைவர் கலைவாணி, பொதுச் செயலாளர்கள் நந்தகுமார், சுபாஷ் சந்திரபோஸ் உள்பட பல்வேறு நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை