உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகராட்சி ஊழியர்களுக்கு தடகளப்போட்டிகள்

மாநகராட்சி ஊழியர்களுக்கு தடகளப்போட்டிகள்

கோவை : மாநகராட்சி ஊழியர்களுக்கான தடகளப்போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.மாநகராட்சியில் பணிபுரியும் உயர் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு, மாநகராட்சி சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.ஆண்கள் மற்றும் பெண்களுக்கு, 40 வயதுக்கு உட்பட்டோர், 40 வயதுக்கு மேற்பட்டோர் என இரு பிரிவுகளில் கிரிக்கெட், கால்பந்து, வாலிபால், செஸ், த்ரோபால், டென்னிகாய்ட் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதன் ஒரு பகுதியாக தடகளப்போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நடத்தப்பட்டது.பணியாளர்களுக்கு 100மீ., 200மீ., 400மீ., ஓட்டப்பந்தயம், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், 400க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்