| ADDED : மார் 28, 2024 10:46 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி அரசு பஸ்களில், 'ஸ்டிக்கர்' ஓட்டி, 100 சதவீதம் ஓட்டளிப்போம் என பொதுமக்களிடம் வலியுறுத்தப்பட்டது.பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் வருவாய்துறை சார்பில், லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி, பஸ் ஸ்டாண்டில் நடந்தது.சப் - கலெக்டர் கேத்திரின் சரண்யா, பஸ்களில், ஸ்டிக்கர்களை ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன. வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜ், மோட்டார் வாகன ஆய்வாளர் கோகுலகிருஷ்ணன், வருவாய்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.அதிகாரிகள் கூறியதாவது: லோக்சபா தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.பொதுமக்கள் கூடும் இடங்கள், கடைகள் முன்பாக, விழிப்புணர்வு பிளக்ஸ்கள் வைக்கப்பட்டுள்ளன.கடைகளில், வழங்கப்படும் பில்களிலும், ஓட்டு அளிப்பதன் அவசியம் குறித்து வாசகங்கள் அச்சடிச்சு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஓட்டுக்கு பணம் வாங்க வேண்டாம்; ஜனநாயக கடமை ஆற்ற வேண்டும் என பொதுமக்களிடம் வலியுறுத்தப்படுகிறது. தொடர்ந்து, லோக்சபா தேர்தலில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, 100 சதவீதம் ஓட்டுப்பதிவாக முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.இவ்வாறு, கூறினர்.