கோவை:கோவை வக்கீல் சங்கத்திற்கு, 2024- 25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல், நேற்று முன்தினம் நடந்தது. மொத்த ஓட்டுக்கள் 3,600ல், 2,366 ஓட்டுக்கள் பதிவாகின. ஓட்டுக்கள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தலைவருக்கு போட்டியிட்ட பாலகிருஷ்ணன், 1,871, ரவீந்திரன், 459 ஓட்டுக்கள் பெற்றனர். பாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். துணை தலைவருக்கு போட்டியிட்ட சிவஞானம், 1,451, ஜோகராஜ், 528, சூர்யகுமார், 332 ஓட்டுக்கள் பெற்றனர். சிவஞானம் வெற்றி பெற்றார்.செயலாளருக்கு போட்டியிட்ட சுதீஷ், 1,248, கலையரசன், 639, திருநாவுக்கரசு, 337, சுரேஷ்குமார், 123 ஓட்டுக்கள் பெற்றனர். சுதீஷ் வெற்றி பெற்றார். பொருளாளருக்கு போட்டியிட்ட ரவிச்சந்திரன், 1,121, விஜய், 677, ஜோசன், 519 ஓட்டுக்கள் பெற்றனர். ரவிச்சந்திரன் வெற்றி பெற்றார். செயற்குழு உறுப்பினருக்கு போட்டியிட்ட ஈஸ்வரமூர்த்தி, 1,529, சதீஷ், 1,382, ஆண்டவர், 1,367, தர்மலிங்கம், 1,350, விஷ்ணு,1,347, சந்தோஷ், 1,306, சங்கர் ஆனந்தம், 1.237 ஓட்டுக்கள் பெற்றனர். இவர்களில் முதல் ஐந்து இடங்களை பிடித்தவர்கள் வெற்றி பெற்றனர்.