உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பட்ஜெட்; கிரெடாய் வரவேற்பு

பட்ஜெட்; கிரெடாய் வரவேற்பு

கோவை : மத்திய அரசின் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சில அறிவிப்புகளுக்கு, கோவை 'கிரெடாய்' அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மூன்றாவது தே.ஜ., கூட்டணி ஆட்சியின் முதலாவது பட்ஜெட், நேற்றுமுன்தினம் தாக்கல் செய்யப்பட்டது.இதுகுறித்து, கோவை 'கிரெடாய்' அமைப்பின் துணை தலைவர் அபிஷேக் கூறியதாவது:பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2.0ன் கீழ், ஏழைகள், நடுத்தர பிரிவை சேர்ந்த குடும்பங்களுக்கு, 10 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு கோடி வீடுகள் கட்டித்த தர திட்டமிடப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு சிறப்புக்குரியது. நாட்டில் உள்ள 'டாப் 500' நிறுவனங்களில், ஒரு கோடி இளைஞர்களுக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் இலவச பயிற்சி அளிக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, வரவேற்புக்குரியது.தவிர, பெண்கள் பெயரில் வாங்கும் சொத்துகளுக்கு, முத்திரை தாள் கட்டணம் குறைக்க வலியுறுத்தப்படும் என்ற அறிவிப்பும் வரவேற்புக்குரியது.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை