| ADDED : ஆக 06, 2024 11:03 PM
கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலையின் கீழ், பட்டயப்படிப்புக்கான இணையதள கலந்தாய்வில் பங்கேற்று இடஒதுக்கீடு பெற்ற மாணவர்களுக்கு, இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு வரும், 9ம் தேதி பல்கலை அரங்கில் நடைபெறவுள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு முன், பொதுப்பிரிவினர் 200 ரூபாயும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின், 5,000 ரூபாய் பல்கலை வளாகத்தில் அன்றே நேரடியாகவோ, அல்லது இணையவழியிலோ, 11ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதில், பங்கேற்கும் மாணவர்கள் கல்வி, சாதி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் வேளாண்மை பிரிவில், டீனிடம் சமர்ப்பிக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழ் சமர்ப்பிக்க தவறினாலோ, சேர்க்கை கட்டணம் செலுத்தாவிட்டாலோ, சேர்க்கைரத்தாகிவிடும். விதிமுறை பின்பற்றாமல், வாய்ப்பை தவற விட்டவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படாது. சந்தேகங்களுக்கு, 94886 35077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.