உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூட்டணி கட்சிகளை கழற்றி விடும் தி.மு.க.,

கூட்டணி கட்சிகளை கழற்றி விடும் தி.மு.க.,

நீலகிரி தொகுதி தி.மு.க., கூட்டணி வேட்பாளரான ராஜா, அவிநாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொங்கலுார், ஆலத்துார் உட்பட்ட கிராமங்கள் மற்றும் திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில் ஓட்டு சேகரித்தார். இதில், கூட்டணி கட்சிகளான காங்., - மா.கம்யூ., - இந்திய கம்யூ., - விடுதலை சிறுத்தைகள் போன்றவற்றின் முக்கிய நிர்வாகிகளுக்கு தகவல் அளிக்காமல் பிரசார பயணம் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்களை 'கவனிக்க'வில்லை என்ற புகார் ஓங்கி ஒலிக்கிறது.கூட்டணிக்கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், ''அவிநாசி சட்டசபை தொகுதியில், நடைபெற்ற பிரசாரத்தில், ஆரம்பம் முதலே கூட்டணிக் கட்சிகளை தி.மு.க., நிர்வாகிகள் மதிப்பதில்லை. ''வேட்பாளர் ராஜா பிரசார பயணத்தின் போது, அவிநாசி சுற்றுவட்டார கிராமங்களில் 20 'பாயின்ட்' மட்டுமே போடப்பட்டிருந்தது. ஆனால், எந்த ஒரு ஊராட்சியிலும் வேட்பாளர் ராஜாவுடன் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளை, தி.மு.க.,வினர் அழைத்துச் செல்லவில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. இது குறித்து, தி.மு.க., தலைமைக்கு தகவல் அளித்துள்ளோம்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை