உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

குழாய் உடைப்பால் வீணாகும் குடிநீர்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி குடிநீர் குழாய் உடைந்து, ஊற்று போன்று குடிநீர் வெளியேறி வீணானது.பொள்ளாச்சி நகராட்சிக்கு, அம்பராம்பாளையம் ஆற்றில் இருந்து குடிநீர் கொண்டு வந்து, மார்க்கெட் ரோடு நீர் உந்து நிலையம் வாயிலாக, குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கு கொண்டு சென்று, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில், பல்லடம் ரோடு விஜயபுரம் அருகே, குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. ஊற்று போல குடிநீர் வெளியேறியதை கண்ட மக்கள், நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள், குடிநீர் வினியோகத்தை நிறுத்தம் செய்து, சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை