| ADDED : மே 30, 2024 11:36 PM
பெ.நா.பாளையம்;துடியலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே குடிநீர் குழாய் உடைப்பால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.கோவை மேட்டுப்பாளையம் ரோடு, துடியலூர் பஸ் ஸ்டாண்ட் அருகே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு, தினமும் ஏராளமான தண்ணீர் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதி ரோடு முழுவதும் தண்ணீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள், குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,' கடந்த மூன்று மாதங்களாக, இதே நிலை நீடிக்கிறது. இது குறித்து மாநகராட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட பல இடங்களில் தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. குடிநீர் குழாய் உடைப்பை உடனடியாக செப்பனிட நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.