| ADDED : ஜூலை 27, 2024 12:32 AM
கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு, வடபுதூர் ஊராட்சியில் உள்ள விவசாயிகள், தக்காளி, சோளம் மற்றும் கம்பு போன்றவைகள் சாகுபடி செய்ய துவங்கியுள்ளனர்.விவசாயிகள் கூறியதாவது: வடபுதூர் சுற்று பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகப்படியாக, பல பயிர் விவசாய முறையை பயன்படுத்துகின்றனர். இரண்டு ஏக்கர் நிலத்தில் தக்காளி, சோளம், கம்பு போன்ற பயிர்களை அரை ஏக்கர், முக்கால் ஏக்கர் என்ற அளவில் விதைப்பு செய்து வருகின்றனர்.விளை நிலம் முழுவதிலும் ஒரே பயிர் சாகுபடி செய்து விற்பனைக்கு எடுத்து செல்லும் போது, விலை குறைவாகிறது. இதனால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க பல பயிர்களை விவசாயம் செய்கின்றனர்.தக்காளியில் 'சிவம்' மற்றும் 'சாகோ' வகையை பயிரிடுகின்றனர். கம்பு சாகுபடி விற்பனைக்கும், சோளம் கால்நடை தீவனமாகவும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான விவசாயிகள் மானாவாரியாகவே பயிரிட்டு வருகின்றனர்.மேலும், பயிர்களுக்கு ஏற்ப செலவினங்களும் உள்ளது. இதில், கம்பு மற்றும் சோளம் தவிர தக்காளிக்கு அதிக செலவு ஏற்படுகிறது.இவ்வாறு, கூறினர்.