உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரத்தினம் கல்லுாரியில் பிலிம் இன்குபேஷன் மையம்

ரத்தினம் கல்லுாரியில் பிலிம் இன்குபேஷன் மையம்

கோவை : ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் காட்சி தொடர்பியல் துறை சார்பில், 'பிலிம் இன்குபேஷன் மையம்' தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக ரத்தினம் கல்லுாரி வளாகத்தில் திறக்கப்பட்டது. துவக்க விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், இயக்குனர் பார்த்திபன் தேசிங்கு, நடிகரும் தயாரிப்பாளருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் நடிகர் ஆரி அர்ஜுனன், கிளஸ்ட்டர் மீடியா கல்லுாரியின் நிறுவனர் அரவிந்தன் கலந்துகொண்டனர்.திரைத்துறை எத்தகைய தாக்கத்தை மக்களிடையே ஏற்படுத்துகிறது,, கல்வியுடன் கலைகளையும் கற்றுக் கொள்வதன் அவசியத்தையும் விருந்தினர்கள் எடுத்துரைத்தனர்.ரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன் செந்தில், செயலாளர் மாணிக்கம், முதல்வர் பாலசுப்பிரமணியன், துணை முதல்வர் சுரேஷ், பிலிம் இன்குபேஷன் மையத்தின் இயக்குனர் சதீஷ் குமார் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை