உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தரமான பருத்திக்கு அறுவடையில் கவனம்

தரமான பருத்திக்கு அறுவடையில் கவனம்

உடுமலை : பருத்தி அறுவடையின் போது, தொழில்நுட்பங்களை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.பருத்தி காய்களில் மேலிருந்து கீழாக லேசாக கீறல் தோன்றி, பின்பு சுமார் 2-3 நாட்களில் முழுவதுமாக நன்றாக மலர்ந்து வெடித்த பிறகே, பருத்தி எடுக்கவேண்டும்.சாகுபடியில், 120 நாளில் தொடங்கி வாரத்துக்கு ஒரு முறை அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறை வீதம் நான்கு முறை பருத்தி எடுக்கலாம். ஒரு கையால் காய்களைப்பறித்து இன்னொரு கையால் பருத்தி சுளைகளை எடுப்பதை தவிர்க்கவேண்டும். காலை இளம் வெயில் நேரத்தில் 10:00 மணிக்குள்ளாகவும், மாலை 3:00 மணிக்கு பின்பு பருத்தி எடுப்பது நல்லது.ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் பருத்தி தரம் பிரிக்கும் வசதிகள் இருந்தால், அவற்றை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். தரக்கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட பருத்திக்கு தனி மதிப்பும், கூடுதல் விலையும் உண்டு. இவ்வாறு, கோவை வேளாண் பல்கலை., அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை