| ADDED : மார் 25, 2024 01:02 AM
கோவை;கோவை லிங்கப்பச்செட்டி வீதியைச் சேர்ந்தவர் விஜயகுமார், 47; நுால் வியாபாரம் செய்து வருகிறார். 2017ம் ஆண்டு கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த பெனிஸ்,45 என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாக பழகி வந்தனர். பெனிஸ் பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார்.இந்நிலையில் பெனிஸ், விஜயகுமாரிடம் தனது தொழிலில் முதலீடு செய்தால் அதிகம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார். மேலும் அதில் வரும் லாபத்தை இருவரும் பகிர்ந்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இதை நம்பி விஜயகுமார் பல்வேறு தவணைகளாக, ரூ.18.75 லட்சத்தை அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.அதன் பின் பெனிஸ் பழைய கார்களை வாங்கி, விற்று எந்த லாப பணத்தையும் தரவில்லை. விஜயகுமார் தனது பணத்தை திருப்பித் தருமாறு, பலமுறை கேட்டு வந்தார். பெனிஸ் தராமல் ஏமாற்றி வந்தார். விஜயகுமார் ஆர்.எஸ்.புரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் பெனிஸ் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.