உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரோட்டோரத்தில் குப்பை: சுற்றுச்சூழல் பாதிப்பு

ரோட்டோரத்தில் குப்பை: சுற்றுச்சூழல் பாதிப்பு

பொள்ளாச்சி;பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், நீர்நிலை ஒட்டிய பகுதிகளிலும், ரோட்டோரங்களிலும், பிளாஸ்டிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், வீடுகள் தோறும் குப்பை சேகரிக்க, துாய்மை பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வீடு வீடாக சென்று மக்கும், மக்காத குப்பைகளை பிரித்து சேகரம் செய்கின்றனர்.ஆனால், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்துவதில்லை. அதற்கு, மாறாக, குடியிருப்பு மற்றும் வணிகக் கடைகளில் சேகரமாகும் குப்பை, நீர் நிலை ஒட்டிய பகுதிகளிலும், ரோட்டோரங்களிலும் கொட்டப்படுகிறது. அருகேயுள்ள விளைநிலங்களும் பாதிக்கப்படுகின்றன.மக்கள் கூறியதாவது:குப்பையை ஓரிடத்தில் குவிப்பதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் வேகமாக பரவும் நிலை ஏற்படுகிறது.குறிப்பாக, நீர்வழித்தடங்கள், ரோட்டோரங்களில் கொட்டுவதை பலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இவற்றில் இருந்து, பிளாஸ்டிக் கழிவுகள், காற்றில் பறந்து, விவசாய நிலங்களை பாதிக்கச் செய்கிறது.தவிர, மழையின் போது, வெள்ளத்தில், அடித்துச் செல்லப்படும் குப்பை, ஆங்காங்கே தேக்கமடைந்து, நிலத்தடி நீர் மட்டத்தையும், சுற்றுச்சூழலையும் பாதிக்கச் செய்கிறது. இவ்வாறு, குப்பை கொட்டப்படுவதைக்கண்டறிந்து தடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை