மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
21 hour(s) ago
நாளைய மின்தடை
21 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
21 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
21 hour(s) ago
கோவை : ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க செல்லும் கார்டுதாரர்களை, 'இன்னும் பொருள் வரல; போயிட்டு நாளைக்கு வாங்க' என கூறி தினமும் அலைக்கழிப்பதாக, குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தில், 1540 ரேஷன் கடைகள் உள்ளன. 11.42 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். அரிசி, கோதுமை, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன.லோக்சபா தேர்தல் காரணமாக, கடந்த மாதம் 19ம் தேதி முதல், ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு இல்லை. தேர்தல் முடிந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகியும், இன்னும் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வரவில்லை.கார்டுதாரர்களை, 'பொருள் வரல; போயிட்டு நாளைக்கு வாங்க' என தினமும் அலைக்கழிப்பதாக, குடும்ப அட்டைதாரர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.ரேஷன்கடை ஊழியர்கள் கூறுகையில், 'ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் ரேஷனில் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தேர்தலுக்கு பிறகு, இந்த மாதத்துக்கான பொருட்கள், இன்னும் ரேஷன் கடைக்கு வழங்கப்படவில்லை. மே 25ம் தேதி ஜூன் மாதத்துக்கான பொருட்கள் வந்து விடும். ஆனால் மே மாதத்துக்கான பொருட்களே இன்னும் வரவில்லை' என்றனர்.இது குறித்து, கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் குணசேகரன் கூறுகையில், '' தேர்தல் விதிமுறை காரணமாக, பொருட்களுக்கு டெண்டர் விடாமல் இருந்தது. இப்போது டெண்டர் முடிவாகி விட்டது. அதனால் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை துவங்கி விட்டது. இந்த வாரத்தில் அனைத்து பொருட்களும் வழங்கப்படும்,'' என்றார்.
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago
21 hour(s) ago