உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போதைப்பொருட்கள் விற்றால் தோலை உரித்து உப்புக்கண்டம்

போதைப்பொருட்கள் விற்றால் தோலை உரித்து உப்புக்கண்டம்

கோவை;''கோவையில் போதை பொருள் கட்டுப்பாட்டு வணிகம் அமைக்கப்படும்,'' என பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்தார்.கோவை லோக்சபா தொகுதிக்குட்பட்ட, கோவை வடக்கு சட்டமன்ற தொகுதி ஊழியர்கள் கூட்டம் கணபதி பகுதியில் நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற கோவை தொகுதி பா.ஜ., வேட்பாளர் அண்ணாமலை பேசுகையில், கோவை ஒரு கல்வி நகரமாக திகழ்கிறது. ஆனால் தி.மு.க., ஆட்சியில் இங்குபோதை பொருள் பழக்கம் அதிகரித்துள்ளது. இவர்களின்லாபத்திற்காகமாணவர்களின் வாழ்க்கை வீணாவதுடன், நம் வீட்டுக் குழந்தைகளை நாமே சந்தேகப்படும் நிலை ஏற்பட்டு விட்டது. நான் உறுதியாக சொல்கிறேன்; போதை கட்டுப்பாட்டு பணியக அலுவலகம் திறக்கப்படும். கோவையில் யாராவது, போதைப் பொருட்களை விற்பனை செய்தால்,தோலை உரித்து உப்புக்கண்டம் போடப்படும். தற்போதுள்ள ஆட்சியாளர்கள் போதை பொருள் விற்பனை செய்பவரை கைது செய்து சில நாட்களில் வெளியே வந்து, வேறு பெயரில் போதை பொருளை விற்பனை செய்ய விடுவது போல இல்லை, போதை கட்டுப்பாட்டு பணியகம். கோவைக்குள் யாராவது போதைப் பொருட்களைக் கொண்டு வந்தால், கை கால்கள் இருக்காது என்பதை உணர்த்துவோம், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை