| ADDED : ஜூலை 30, 2024 11:41 PM
கோவை:பள்ளிகளுக்கு இடையேயான வாலிபால் போட்டியில் மாணவ - மாணவியர் சிறப்பாக விளையாடினர். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி சார்பில் 'ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி கோப்பைக்கான' 4ம் ஆண்டு மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி, நவ இந்தியா ராமகிருஷ்ணா கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. இப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று நாக் அவுட் மற்றும் லீக் முறைப்படி போட்டியிடுகின்றன. நேற்று மாணவியர் பிரிவு போட்டிகள் நடத்தப்பட்டன.போட்டி முடிவுகள்: விஸ்வேஸ்வரா பள்ளி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் வித்ய விகாஸ் பள்ளி அணியையும், ராமகிருஷ்ணா மெட்ரிக்., பள்ளி அணி 2 - 1 என்ற செட் கணக்கில் சுகுணா பள்ளியையும், சி.எம்.எஸ்., பள்ளி அணி 2 - 1 என்ற செட் கணக்கில் நேரு மகா வித்யாலயா பள்ளியையும், வி.சி.வி., சிசு வித்யோதயா பள்ளி அணி 2 - 1 என்ற செட் கணக்கில் கீர்த்திமான் பள்ளியையும், அகர்வால் பள்ளி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் கிருஷ்ணம்மாள் பள்ளியையும் வீழ்த்தின. இதேபோல், மாணவர்கள் பிரிவில் ராமகிருஷ்ணா, என்.ஜி.என்.ஜி., ஏ.பி.சி., சுகுணா ரிப், கீர்த்திமான், சி.எம்.எஸ்., அகர்வால் ஆகிய அணிகள் இரண்டாம் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.