உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மண் வளத்தை அதிகரிக்க கைகொடுக்கும் ஊடுபயிர்

மண் வளத்தை அதிகரிக்க கைகொடுக்கும் ஊடுபயிர்

நெகமம்;நெகமம் மற்றும் சுற்று பகுதிகளில், பெரும்பாலும் தென்னை மற்றும் பிற வகை காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. பெரும்பாலான விவசாயிகள், தங்கள் விளை நிலத்தில் உள்ள பயிர்களை நோயில் இருந்து காக்க பல ரசாயன உரம் மற்றும் மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.இதனால், மண்ணின் வளம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இதனால், அங்கக கரிம சத்து பெரிதும் குறைந்து போகுகிறது.மண்ணில் அங்கக கரிம சத்து, 0.3 சதவீதத்துக்கு கீழ் சென்றால், விவசாயத்துக்கு தகுதியற்றதாக உள்ளது. தற்போது தமிழகத்தில், 80 சதவீத விவசாய நிலங்கள் இவ்வாறு உள்ளது. இதை தவிர்க்க, ஊடுபயிர் வாயிலாக இயற்கை முறை விவசாயத்தை பின்பற்ற வேண்டும்.இதனால், பயிர்கள் மீது வெயில் தாக்கம் அதிகம் படாமல் இருக்கும். மண்ணில் ஈரப்பதம் அதிகரிக்கும். ரசாயன உரத்தை தவிர்த்து இயற்கை உரத்தை பயன்படுத்த வேண்டும். இதன் வாயிலாக, அங்கக கரிம சதை அதிகரிக்க முடியும். இவ்வாறு செய்தால் மண்ணின் வளம் பெரும் என, விவசாயி சம்பத்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை