உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி விளையாட்டு தின விழா சிறப்பு

கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி விளையாட்டு தின விழா சிறப்பு

கோவை;கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியின், 39வது ஆண்டு விளையாட்டு தின விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது. விழாவில் சர்வதேச தடகள வீரர் முகமது சலாவுதீன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விளையாட்டு தினத்தை முன்னிட்டு, மாணவர்கள் நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு 300 புள்ளிகளுடன், பிரமிங்கம் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. டெர்பி அணி (295) இரண்டாமிடத்தையும், ஸ்பிரிங்பீல்டு (275) அணி மூன்றாமிடத்தையும் பிடித்தன. இதேபோல், அணிவகுப்பில் டெர்பி அணி முதலிடத்தையும், பிரமிங்கம் அணி இரண்டாமிடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர் பரிசுகளை வழங்கினார்.கல்லுாரி முதல்வர், துறைத்தலைவர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். விளையாட்டு தின விழாவுக்கான ஏற்பாடுகளை, கல்லுாரியின் உடற்கல்வி இயக்குனர் மாரிசெல்வம் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை