உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முத்தாலம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

முத்தாலம்மன் கோவிலில் நாளை கும்பாபிேஷகம்

உடுமலை : பூலாங்கிணறு முக்கோணம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிேஷகம் நாளை (26ம் தேதி) நடக்கிறது.உடுமலை அருகே, பூலாங்கிணறு முக்கோணத்தில், முத்தாலம்மன் கோவில் உள்ளது. கோவிலில், திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விநாயகர், முத்தாலம்மன் மற்றும் நவக்கிரகங்கள் ஆகிய சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டன.கும்பாபிேஷக விழா மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் மகாகணபதி, மகா லட்சுமி ேஹாமம் நடந்தது.காலை, 9:00 மணிக்கு மேல், தீர்த்தம், முளைப்பாலிகை அழைத்து வருதல், மாலை, 6:00 மணிக்கு மேல் பவுர்ணமி பூஜை நடைபெற்றது.நேற்று மங்கள இசை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.நாளை (26ம் தேதி) காலை, 9:00 மணிக்கு மேல், கலசம் புறப்படுதல், அம்மன் கோபுர கலசம் கும்பாபிேஷகம் நடக்கிறது. காலை, 9:00 மணி முதல் பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை