உள்ளூர் செய்திகள்

செவ்வாழை விலை ஜிவ்

கிணத்துக்கடவு,;கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் வாழை வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் வாழை ஏல முறையில் விற்பனை செய்யப்படுகிறது. விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை இங்கு எடுத்து வந்து விற்பனை செய்கின்றனர்.இந்த வாரம் மார்க்கெட்டில் வாழை வரத்து குறைந்து, விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. செவ்வாழை கிலோ - 74, நேந்திரன் - 40, ரஸ்தாளி - 40, கதளி - 48, பூவன் - 35, சாம்பிராணி வகை - 40 ரூபாய்க்கு விற்பனை ஆனது.கடந்த வாரத்தை விட தற்போது, செவ்வாழை கிலோவுக்கு, 14 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. நேந்திரன் - 2, கதளி - 2 முதல் 5 ரூபாய் வரை விலை சரிந்துள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'மழை காலம் என்பதால், வாழை வரத்து குறைவாக உள்ளது. வரும் நாட்களில் வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை