மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
19 hour(s) ago
நாளைய மின்தடை
19 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
19 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
19 hour(s) ago
கோவை:அகில இந்திய அளவிலான ஸ்கேட்டிங் போட்டி, கோவை மற்றும் பொள்ளாச்சியில் ஆக., 7ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கம், கோவை மாவட்ட ஸ்கேட்டிங் சங்கம் சார்பில், இரண்டாம் ஆண்டு 'இந்தியா ஸ்கேட்' தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டிகள் ஆக., 7 முதல் 11ம் தேதி கோவை மற்றும் பொள்ளாச்சியில் நடக்கிறது. இப்போட்டியில், 22 மாநிலங்களை சேர்ந்த 2165 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். வீரர் - வீராங்கனைகளுக்கு, ஸ்பீடு, ஆர்டிஸ்டிக், ரோலர் ஹாக்கி, இன்லைன் ஹாக்கி, இன்லைன் பிரீஸ்டைல், ஆல்பைன், டவுன்ஹில், ரோலர் டெர்பி, ரோலர் பிரீஸ்டைல், ஸ்கேட் போர்டிங், ஸ்கூட்டர் என 11 வகையாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதன், ஸ்பீடு ஸ்கேட்டிங் போட்டி, பொள்ளாச்சி சர்வதேச ரோலர் ஸ்கேட்டிங் கோர்ட்டிலும், ஆர்டிஸ்டிக், ரோலர் ஹாக்கி, இன்லைன் ஹாக்கி, இன்லைன் பிரீஸ்டைல், ஸ்கேட் போர்டு, ரோலர், டவுன்ஹில், ஆல்பைன் உள்ளிட்ட போட்டிகள், கோவை வ.உ.சி., ஸ்கேட்டிங் ரிங் மற்றும் காந்திபார்க் ஸ்கேட்டிங் ரிங் ஆகிய இடங்களிலும் நடக்கின்றன. போட்டிக்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவர் சுதாகரன், துணை தலைவர் அருண் பிரசாத், செயலாளர் சந்திரசேகர், பொருளாளர் சாந்த நரசிம்மன், பொள்ளாச்சி மண்டல ரோலர் ஸ்கேட்டிங் சங்க தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்துள்ளனர்.
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago
19 hour(s) ago