மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
6 hour(s) ago
நாளைய மின்தடை
6 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
6 hour(s) ago
ஓட்டுச்சாவடிக்குள், தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக, வாக்காளர்கள், தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை அளிப்பது அவசியமாகிறது.லோக்சபா தேர்தலில், வாக்காளர் அடையாள அட்டை உட்பட, 13 வகையான ஆவணங்களில், ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, ஓட்டளிக்கலாம் என தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு, பான் கார்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை.மாநில அரசின் பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன்கூடிய அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய பேங்க் பாஸ்புக் அல்லது தபால் கணக்கு புத்தகம், மத்திய அரசின் தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு அட்டை.ஓட்டுனர் உரிமம், பாஸ்போர்ட், மக்கள் தொகை கணக்கீட்டின்படி வழங்கிய ஸ்மார்ட் கார்டு, ஓய்வூதிய ஆவணம், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணி அட்டை ஆகிய, 13 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி, தேர்தலில் ஓட்டளிக்கலாம், என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
6 hour(s) ago
6 hour(s) ago
6 hour(s) ago