உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பார்க் கல்லுாரி முதலமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

பார்க் கல்லுாரி முதலமாண்டு மாணவர்கள் வரவேற்பு விழா

கோவை;பார்க் கல்வி குழுமத்தின் பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா கல்லுாரி அரங்கில் நடந்தது. இக்கல்லுாரியில், 8 பிரிவுகளின் கீழ் பாடத்திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. நடப்பாண்டு முதல், எக்ஸ் ரே டெக்னீசியன், வெப் டிசைனிங் என்ற புதிய பாடப்பிரிவுகள் துவக்கப்பட்டுள்ளன. முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லுாரி செயல்பாடுகள், நுாலக பயன்பாடு, திறன் மேம்பாடு குறித்து வழிகாட்டுதல் வழங்கப்பட்டது. இதில், இறுதியாண்டு மாணவர்கள் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்வில், பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் அனுஷா ரவி, கல்லுாரியின் முதல்வர் சுரேஷ் குமார், பார்க் கல்வி குழுமத்தின் பொது மேலாளர் சதிஷ் குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை